மிதுனம் - வார பலன்கள்
முன்னெச்சரிக்கை குணம் நிறைந்த மிதுன ராசி அன்பர்களே!
அதிக முயற்சியோடு செயல்பட்டாலும் எதிர்பார்ப்புக்குத் தக்கபலன் கிடைப்பது சந்தேகமே. பணவரவுகள் எதிர்பார்த்தபடி வந்தாலும் செலவுகள் அதிகமாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முயற்சியின் பேரில் பதவி உயர்வு ஏற்படலாம். அலுவலகத்தில் வரவேண்டிய பண வரவுகள் கைகளுக்கு வந்து சேரும்.
சொந்தத் தொழில் செய்பவர்கள், புதிய பணிகளில் அதிக ஆர்வத்தோடு செயல்படுவர். வேலைகளுக்குத் தக்க ஆதாயம் கிடைத்து முக்கிய செலவுகளுக்குப் பயன்படுத்துவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் பணியாளர்களின் ஒத்துழைப்புடன் அதிக லாபம் பெறுவர். தாய்வழி உறவுகளின் சுப நிகழ்வுகளில் பங்கேற்கும் பெண்களுக்கு மனவருத்தம் உண்டாகலாம். கலைஞர்களுக்கு, புதிய ஒப்பந்தங்களின் மூலம் பண வரவு வந்துசேரும். பங்குச்சந்தை லாபம் தரும்.
பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபட்டு வாருங்கள்.