மிதுனம் - வார பலன்கள்
எப்போதும் உற்சாகமுடன் செயல்களில் ஈடுபடும் மிதுன ராசி அன்பர்களே
செய்யும் செயல்களில் தீவிர முயற்சிகளோடு பாடுபடுவீர்கள். வெள்ளிக்கிழமை சந்திராஷ்டமம் உள்ளதால் பண வசதிகள் எதிர்பார்த்தபடி கிடைத்தாலும், செலவுகள் அதிகமாகும். சிலருக்கு எதிர்பாராத தனவரவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு முயற்சிகள் மூலம் எதிர்பார்க்கும் காரியம் வெற்றியளிக்கும். உயரதிகாரிகளின் ஆதரவுடன் முக்கிய வேலையைச் செய்து பலன் பெறுவீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்குப் பழைய வாடிக்கையாளர் மூலம் புதிய நபரின் அறிமுகமும், அவரால் தொழில் முன்னேற்றமும் ஏற்படக்கூடும். கூட்டுத் தொழில் வியாபாரம், முன்னேற்றமாக நடைபெறும். குடும்பத்தில் விருந்தினர்களின் வருகையால் செலவு ஏற்படலாம். கலைஞர்கள் பணிகளில் சிறப்பாக ஈடுபடுவார்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் வழக்கமான லாபம் கிடைக்காலம்.
பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.