மிதுனம் - வார பலன்கள்
உழைப்பில் நம்பிக்கை கொண்ட மிதுன ராசி அன்பர்களே!
நீண்ட காலமாக முடியாமல் இருந்த காரியங்கள், இப்போது நடைபெறும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும், மின்சாரம், நெருப்பு சம்பந்தப்பட்ட பணிகளிலும் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் சில சலுகைகளை பெறுவீர்கள். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு, வாடிக்கையாளர்களின் பாராட்டும், கூடுதல் வருமானமும் கிடைக்கப்பெறும். கூட்டுத்தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். பணத்தை வெளியில் கொண்டு செல்லும்போது பாதுகாப்பு அவசியம். குடும்பம் சீராக நடைபெறும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். நெருங்கிய உறவினர் நிகழ்ச்சியில் பங்கேற்பீர்கள். கலைஞர்களுக்கு, பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடும். பங்குச்சந்தை வியாபாரத்தில் அதிக லாபம் பெற அன்றாட நிலவரங்களைக் கவனித்து செயல்படுங்கள்.
பரிகார:- இந்த வாரம் சனிக்கிழமை சனி பகவானுக்கு எள்ளன்னம் நைவேத்தியமாக படைத்து வணங்குங்கள்.