மிதுனம் - வார பலன்கள்
உற்சாக உழைப்பை வெளிப்படுத்தும் மிதுன ராசி அன்பர்களே!
திட்டமிட்டு செயலாற்றுவதால் வெற்றியைப் பெறுவீர்கள். தக்க நபர்கள் இல்லாத காரணத்தால், சில காரியங்களில் காத்திருக்க நேரலாம். வரவேண்டிய பணம் சிறிது தாமதத்துடன் வந்துசேரும். வெளியூர் பயணங்களுக்கு குடும்பத்துடன் செல்லும் நிலை உருவாகலாம். திடீர் செலவுகள் ஏற்படும்.
உத்தியோகத்தில் உள்ளவர்கள் சிலருக்கு அலுவலகத்தில் வரவேண்டிய கடன் தொகை கைக்கு வந்து சேரலாம். தேவையில்லாத பேச்சுகளால் சக நண்பர்களிடத்தில் மனவேறுபாடு உண்டாகலாம். சொந்தத் தொழிலில் எதிர்பார்த்ததைவிட பணவரவுகள் அதிகமாகலாம். கூட்டு வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய கிளைகள் தொடங்க திட்டமிடுவீர்கள். பெண்கள் பணியாற்றும் போது கவனமாக இருங்கள். கலைஞர்கள், புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். பங்குச்சந்தையில் முதலீடு அதிகமாகும்.
பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி, நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.