மிதுனம் - வார பலன்கள்
உறுதியான உள்ளம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!
மறைமுகமான எதிர்ப்பை சந்திக்க வேண்டியதிருக்கும். சில செயல்கள் வெற்றிபெற முயற்சிகள் தேவைப்படும். நீண்ட காலமாக முடிவுறாத காரியம், திடீரென நடைபெறலாம். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு, அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். வரவேண்டிய கடன் தொகை கிடைக்க முயற்சி மேற்கொள்வீர்கள்.
சொந்தத் தொழிலில் வேலைப்பளு அதிகமாகும். முதலில் செய்து கொடுத்த வேலையில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்து கொடுக்க நேரிடும். கூட்டுத்தொழில் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் குறையலாம். குடும்பத்தில் சிறுசிறு கடன் தொல்லை இருக்கும். பணிபுரியும் பெண்கள் கவனமாக இருப்பது நல்லது. ஆடை அலங்காரப் பொருட்களை வாங்கத் திட்டமிடுவீர்கள். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்தாலும், எதிர்பார்க்கும் வருமானம் இருக்காது.
பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நவக்கிரகத்தில் உள்ள சூாியனுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள்.