மிதுனம் - வார பலன்கள்
சிந்தனை வளம் நிறைந்த மிதுன ராசி அன்பர்களே!
செவ்வாய் பகல் 3.57 மணி முதல் வியாழக்கிழமை மாலை 6.22 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், எந்த முடிவுகளிலும் நிதானம் தேவை. உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவுடன் பல சலுகைகளைப் பெறுவார்கள். சொந்தத் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். அதே நேரம் அவசர வேலைகள், ஓய்வு நேரத்தை குறைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் பெருகும். புதிய தொழில் தொடங்க பங்குதாரர்களிடம் பேசி முடிவெடுப்பீர்கள். தொழிலுக்குத் தேவையான உபகரணங்களை வாங்கவும், பழைய பொருட்களை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் அமைதியான போக்கு காணப்படும். பெண்களுக்கு விரும்பும் பொருட்களை வாங்கிக் கொடுத்து உற்சாகப்படுத்துவீர்கள். கலைஞர்கள் பிரபல நிறுவனங்களில் ஒப்பந்தம் பெறுவர்.
பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை லட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுங்கள்.