மிதுனம் - வார பலன்கள்


மிதுனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 31 Aug 2023 7:34 PM GMT (Updated: 31 Aug 2023 7:36 PM GMT)

தோல்வியைக் கண்டு துவளாத மிதுன ராசி அன்பர்களே!

தடைகளை முறியடித்து முன்னேறுவீர்கள். எதிர்பார்க்கும் தன வரவுகளில் மாற்றம் இருக்காது. சிலருக்கு அரசாங்கத்தின் மூலம் விருது, பாராட்டு கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, சகப் பணியாளர்களிடம் மதிப்பு உயரலாம். உயரதிகாரிகளின் ஆதரவையும், அதன் மூலம் சில சலுகைகளையும் பெறுவீர்கள். எதிர்பார்ப்புகள் அனுகூலமாகலாம். பணிகளின்போது முக்கிய கோப்புகளில் கவனம் தேவை.

சுயதொழில் செய்பவருக்கு அதிக ஆதாயத்துடன் கூடிய புதிய வேலை வந்து சேரலாம். ஓய்வில்லாமல் பணிகளில் ஈடுபடுவீர்கள். கூட்டுத்தொழில் வியாபாரத்தில் லாபம் கூடுதலாகும். பணியாளர்களின் ஒத்துழைப்பு தொழில் அபிவிருத்திக்கு அனுகூலமாகக் காணப்படும். குடும்பத்தில் தம்பதிகள் ஒற்றுமை பலப்படும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உற்சாகமாக காணப்படுவர்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை லட்சுமி நரசிம்மருக்கு துளசி மாலை அணிவித்து வணங்குங்கள்.


Next Story
  • chat