சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
எதையும் கலையழகுடன் செய்யும் சிம்ம ராசி அன்பர்களே!
வெள்ளி பகல் 1.13 மணி முதல் ஞாயிறு மாலை 4.26 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், முக்கிய செயல்கள் அரைகுறையாகப் பாதியிலேயே நிற்க நேரிடும். எதிர்பார்க்கும் தனவரவு சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்தாலும் செலவு முன்நிற்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக நண்பர்களின் வேலையையும் சேர்த்துச் செய்ய வேண்டியதிருக்கும். பணிகளில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
சொந்தத் தொழிலில் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவீர்கள். நவீன கருவிகளின் உதவியுடன் வேலைகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். கூட்டுத் தொழில் வியாபாரத்தில் வழக்கமான லாபம் குறையாது. மூலப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் காணப்பட்டாலும், பெரிய பாதிப்பு ஏற்படாது. கலைஞர்கள் பணிகளில் பங்கு பெற வெளியூர் பயணங்களை மேற்கொள்வர்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டி வழிபடுங்கள்.