சிம்மம் - வார பலன்கள்


சிம்மம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 21 July 2023 1:24 AM IST (Updated: 21 July 2023 1:25 AM IST)
t-max-icont-min-icon

தனித்தன்மை நிறைந்த சிம்ம ராசி அன்பர்களே!

அலுவலக அதிகாரிகளையும், நிதி சம்பந்தமானவர்களையும் சந்திக்கும் வாரம் இது. உத்தியோகஸ்தர்களுக்கு சிரமம் உண்டாகும் சூழ்நிலை அமையலாம். பொறுமையைக் கடைப்பிடியுங்கள். வேலைப்பளு அதிகரிக்கும். சகப் பணியாளர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சக ஊழியரின் பணியையும் செய்யவேண்டியதிருக்கும்.

சொந்தத் தொழிலில் எதிர்பார்க்கும் வருமானம் வந்துசேரும். பணியாளர்களின் வேலைகளை ஒழுங்குபடுத்துவீர்கள். கூட்டுத்தொழிலில் உள்ளவர்கள், போட்டிகளைச் சமாளிக்க வேண்டியதாக இருக்கும். குடும்பத்தில் கணவன்-மனைவி அன்யோன்யம் பலப்படும். உறவினர் வருகையால் அதிக செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். கலைஞர்கள், பழைய ஒப்பந்தங்களில் கவனம் செலுத்துவார்கள். பங்குச்சந்தை வியாபாரம் நன்றாக இருக்கும்.

பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடுங்கள்.


Next Story