சிம்மம் - வார பலன்கள்
4.8.2023 முதல் 10.8.2023 வரை
எழுத்துத் துறையில் சாதனை படைக்கும் சிம்ம ராசி அன்பர்களே!
சனிக்கிழமை முதல் திங்கள் காலை 8.28 மணி வரை சந்திராஷ்டம் உள்ளதால், செயல்களில் சிறு சிறு தடைகள் ஏற்படும். என்றாலும் முடிவில் சில செயல்களில் முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். பணப் பரிவர்த்தனைகளை கவனத்துடன் செய்யுங்கள். நீண்ட காலமாக பிரிந்த நண்பரை சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும்.
உத்தியோகத்தில் பதவி உயர்வு சம்பந்தமாகச் செய்த முயற்சிகள் பயனளிக்கக் கூடும். சக ஊழியர்களுடன், வீண் பேச்சுகளைத் தவிர்ப்பது அவசியம். சொந்தத் தொழிலில் உள்ளவர்களுக்கு அதிக ஒப்பந்தங்கள் ஏற்படலாம். பண வரவும் அதிகமாகும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் வருமானத்தைப் பெருக்க கூட்டாளிகளுடன் கூடி ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும். கலைஞர்கள் பெரிய நிறுவனத்தில் இருந்து வாய்ப்புகளைப் பெற முற்படுவார்கள்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் திங்கட்கிழமை அம்மனுக்கு வெண்மையான மலர் மாலை சூட்டி வணங்குங்கள்.