சிம்மம் - வார பலன்கள்


சிம்மம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 18 Aug 2023 1:04 AM IST (Updated: 18 Aug 2023 1:05 AM IST)
t-max-icont-min-icon

உற்சாகத்துடன் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே!

எடுத்த காரியங்களை முயற்சியுடன் செய்து வெற்றிபெறுவீர்கள். சொத்து சம்பந்தமான பிரச்சினை முடிவுக்கு வரும். கொடுக்கல் - வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பழைய பகை மறையும். சிலர் புதிய வீட்டில் குடியேறி மகிழ்வர். உத்தி யோகத்தில் சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கலாம். அலுவலகக் கடன் கைக்கு வரும். நிலுவைத் தொகை கிடைப்பதால் மனத்திருப்தி உண்டாகும்.

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு புதிய நபர்கள் மூலம் வேலைப்பளு அதிகரிக்கும். இருப்பினும் அதனால் பொருளாதார நிலை உயரப்பெறுவீர்கள். கூட்டுத் தொழில் நன்றாக நடைபெற்று லாபம் கிடைக்கும். புதிய கிளை தொடங்க முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். ஒரு சிலருக்கு ஆரோக்கியத் தொல்லை ஏற்படலாம். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலம் புகழ் சேரும்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டுங்கள்.


Next Story