சிம்மம் - வார பலன்கள்
நண்பர்களை அனுசரித்துச் செல்லும் சிம்ம ராசி அன்பர்களே!
உங்கள் செயல்களில் முன்னேற்றமான பலன்களைப் பெறுவீர்கள். முக்கிய நண்பர் ஒருவர், உங்கள் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு விரும்பிய இடமாற்றமும், சம்பள உயர்வும் கிடைக்கலாம். சிலர் அலுவலகத்தில் எதிர்பார்த்த கடன் தொகை கிடைத்து மகிழ்வார்கள்.
சொந்தத் தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப பணிகளை செய்து கொடுத்து பாராட்டு பெறுவர். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணியாளர்களை கண்காணித்து அவ்வப்போது அறிவுரை கூறுவீர்கள். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். சுபநிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்துவீர்கள். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற்று பணிகளில் சிறப்பாக ஈடுபடுவர்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு செவ்வரளி மாலை அணிவித்து வழிபடுங்கள்.