சிம்மம் - வார பலன்கள்
உயர்ந்த உள்ளம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!
எதிலும் கூடுதல் கவனம் தேவை. பணிகளில் நெருக்கடி ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள், அதிகாரிகள் ஒப்படைத்த பணிகளை கவனமுடன் செய்து பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வும், சிலருக்கு ஊதிய உயர்வும் கிடைக்கக்கூடும்.
சொந்தத் தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் வருகையால் ஏற்றம் ஏற்படும். வருமானம் அதிகரித்து வசதி வாய்ப்புகள் பெருகும். கூட்டுத்தொழிலில் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை வழங்கும்.
குடும்பத்தில் சீரான முன்னேற்றம் காணப்படும். கடன்களை தீர்த்து கவலையை மறப்பீர்கள். பெண்களுக்கு குடும்பத்தில் கவுரவம் அதிகரிக்கும். கலைஞர்கள் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். புதிய வாய்ப்பு கிடைத்து புகழும், பொருளும் கிடைக்கச் செய்யும். பங்குச்சந்தை வியாபாரம் வழக்கம் போல நடைபெறும்.
பரிகாரம்: விநாயகருக்கு செவ்வாய்க்கிழமை அருகம்புல் மாலை சூட்டி வழிபட்டால் தடைகள் அகலும்.