சிம்மம் - வார பலன்கள்


சிம்மம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 16 Dec 2022 1:24 AM IST (Updated: 16 Dec 2022 1:24 AM IST)
t-max-icont-min-icon

சிந்தித்து முடிவெடுக்கும் சிம்ம ராசி அன்பர்களே!

அவசியமான காரியங்களை அதிக முயற்சியோடு செய்து வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு இடமாற்றம் ஏற்படும் வாய்ப்புண்டு. சிலருக்குப் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கக்கூடும். சொந்தத்தொழில் ஏற்றம் தருவதாக அமையும். புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் பொருளாதார உயர்வு காணப்படும். கூட்டுத்தொழிலில் சுமாரான லாபம் கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகி, மகிழ்ச்சிப்படுத்தும். பங்குச்சந்தை வியாபாரத்தில் லாபம் குறையாது. கலைஞர்கள், புதிய வாய்ப்புகளில் மகிழ்வோடு பணியாற்றுவர். வருமானம் அதிகரிக்கும். சகக்கலைஞர் ஒருவருக்கு, அவரின் உதவியைப் பாராட்டி பரிசளிப்பீர்கள். குடும்பத்தில் சிறுசிறு மனவேறுபாடுகள் வந்துபோகும். கடன்களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். சுபகாரியங்கள் திட்டமிட்டபடி நடைபெறும்.

பரிகாரம்:- தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை நெய் தீபமேற்றி வழிபாடு செய்வது நற்பலன்களைத் தரும்.

1 More update

Next Story