சிம்மம் - வார பலன்கள்
கலைகளில் நாட்டம் நிறைந்த சிம்ம ராசி அன்பர்களே!
முயற்சிகளில் தீவிரம் இருந்தாலும் திருப்தியான பயன்களைப் பெற சிறிது தாமதமாகலாம். அவசர காரியங்களுக்கு நண்பர்களின் உதவியை நாட வேண்டியது இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் அதிகமாவதால் சிரமப்பட நேரிடும். பண வரவு தள்ளிப் போகும். சொந்தத்தொழிலில் வேலைப்பளு அதிகரித்தாலும், வருமானம் எதிர்பார்த்த அளவு இருக்காது. கூட்டுத் தொழிலில் இருப்பவர்களுக்கு, எதிர்பார்க்கும் லாபம் குறையலாம். போட்டிகளாலும், விலைவாசி ஏற்றத் தாழ்வுகளாலும் தொல்லை ஏற்படலாம். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றும். வருமானக் குறைவால் கடன் வாங்கும் நிலை உருவாகும். கலைஞர்கள், புதிய வாய்ப்புகளைப் பெற அதிக சிரமப்பட வேண்டியதிருக்கும். பங்குச்சந்தை வியாபாரம் எதிர்பார்த்தபடி லாபம் தராமல் போகலாம்.
பரிகாரம்:- சுதர்சனப் பெருமாளுக்கு புதன்கிழமை, துளசிமாலை சூட்டி வழிபட்டால் சகல நன்மைகளும் ஏற்படும்.