சிம்மம் - வார பலன்கள்


சிம்மம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 26 Jan 2023 7:49 PM GMT (Updated: 2023-01-27T01:20:39+05:30)

முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!

வெள்ளிக்கிழமை அன்று சந்திராஷ்டமம் உள்ளதால் சில தொய்வு ஏற்படும். பணச்செலவு அதிகம் இருந்தாலும், பாதிப்பு இருக்காது. உத்தியோகஸ்தர்கள், செய்த வேலையில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். சகப் பணியாளர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

சொந்தத் தொழில் செய்பவர்கள், பணிகளை விரைவாக செய்து கொடுக்க வேண்டியதிருக்கும். கூட்டுத்தொழிலில் வழக்கமான லாபம் குறையாது. பணியாளர்களின் ஒத்துழைப்பால் வியாபார அபிவிருத்தி ஏற்படும். குடும்பத்தில் சிறுசிறு கடன் தொல்லைகள் இருக்கும். பெண்கள், அக்கம் பக்கத்தினருடன் சுமுகமாகப் பழகுவது அவசியம். கலைஞர்கள், புதிய வாய்ப்பினைப் பெற தீவிரமாக முயற்சிப்பார்கள். சகக்கலைஞர்கள் அனுசரணையாக இருப்பார்கள். பங்குச்சந்தையில் அதிக லாபம் பெற சிறிது காலம் பொறுத்திருங்கள்.

பரிகாரம்:- செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு, சிவப்பு மணி மாலை சூட்டினால் சிறப்பான பலன் தரும்.


Next Story