சிம்மம் - வார பலன்கள்


சிம்மம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 17 Feb 2023 1:25 AM IST (Updated: 17 Feb 2023 1:25 AM IST)
t-max-icont-min-icon

வேலைகளை நுணுக்கமாகச் செய்யும் சிம்ம ராசி அன்பர்களே!

புதன் மற்றும் வியாழக்கிழமை சந்திராஷ்டமம் உள்ளதால், எதிலும் கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது. சில எதிர்பாராத நல்ல திருப்பங்கள் நிகழும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். சிலர் குலதெய்வ வழிபாடு செய்ய பயணம் மேற்கொள்வர். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். மனைவியின் உடல்நலனில் தொல்லைகள் ஏற்படும் என்பதால் கவனமாக இருங்கள்.

பணிபுரியும் இடத்தில், உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும். அதே நேரம் சகப் பணியாளர்களின் மத்தியில் சிறு குழப்பம் ஏற்படவும் வாய்ப்புண்டு. உறவினர்கள் சிலரின் கடுமையான வார்த்தைகளால் மனவருத்தம் உண்டாகும். இந்த வாரம் முழுவதும் உங்களுக்கு நிதானமும், ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்யும் நலனும் தேவை. திட்டமிட்டு செயல்படுவதால் சில பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும்.

பரிகாரம்:- இந்த வாரம் செய்வாய்க்கிழமை, முருகப்பெருமானுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள்.

1 More update

Next Story