சிம்மம் - வார பலன்கள்


சிம்மம் - வார பலன்கள்
தினத்தந்தி 2 March 2023 8:01 PM GMT (Updated: 2023-03-03T01:34:28+05:30)

வார ராசி பலன்கள் 3.3.2023 முதல் 9.3.2023 வரை

நீதி நெறியில் நம்பிக்கை கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!

உற்சாகத்தோடு ஆரம்பிக்கும் செயல்கள் தாமதமாகலாம். புதிய நண்பர்களால் மாற்றங்களைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் புதிய திருப்பம் ஏற்படக்கூடும். பொறுப்புகள் கைமாறிப் போகும். வேறு இடங்களுக்கு திடீர் மாற்றம் ஏற்படும். சொந்தத்தொழிலில் எதிர்பார்த்த லாபம் பெற முயற்சிகள் அதிகம் தேவைப்படும். பங்குச்சந்தையில் சுமாரான லாபம் ஏற்படலாம். நிலவரங்களை நிதானமாக கவனித்து அதன்பின் செயல்படுவது நல்லது.

கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெற பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியதிருக்கும். பிரச்சினைக்குரிய விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு தொல்லை களைச் சந்திக்க நேரிடும். சுபகாரியம் தள்ளிப் போகலாம். பெண்களுக்கு சேமிப்பு பெருகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குலதெய்வ கோவிலுக்குச் செல்ல முடிவு செய்வீர்கள்.

பரிகாரம்:- வெள்ளிக்கிழமை அம்மன் சன்னிதியில் நெய் தீபமிட்டு வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும்.


Next Story