சிம்மம் - வார பலன்கள்
முன்னேற்றமான செயல்களில் ஈடுபடும் சிம்ம ராசி அன்பர்களே!
தீவிர முயற்சியால் சில காரியங்களில் வெற்றியடைவீர்கள். தளர்வடையும் காரியங்களை நண்பர்களின் உதவியுடன் முயற்சி செய்து வெற்றி பெற முற்படுவீர்கள். ஆரோக்கிய குறை அகன்று மனதில் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் செய்யும் சிறு தவறும் உயரதிகாரிகளின் பார்வையில் பெரிதாகத் தெரியக்கூடும். உங்களைப்பற்றி புகார் கூறும் நண்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு புதிய நபர் மூலம் பொருளாதாரத்தில் முன்னேற்றமும், தொழில் அபிவிருத்தியும் ஏற்படலாம். கூட்டுத்தொழில் முயற்சியில் லாபம் அதிகரிக்கும். போட்டியாளர்களை சமாளிக்க கூட்டாளிகளோடு கலந்து பேசி நல்ல முடிவெடுப்பீர்கள். குடும்பம் நன்றாக நடைபெற்றாலும், அவ்வப்போது சிறு சிறு பிரச்சினைகளும் ஏற்படலாம். கலைஞர்கள் முயற்சியின் பேரில் புதிய வாய்ப்புகளைப் பெறுவர்.
பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, அங்காரனுக்கு மாலை சூட்டி, நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.