சிம்மம் - வார பலன்கள்
கவலைகளை வெளிப்படுத்தாத சிம்ம ராசி அன்பர்களே!
சில காரியங்களில் அதிக முயற்சியின் பேரில் வெற்றிகரமான பலன்களை அடைவீர்கள். சில செயல்களில் நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி தள்ளிப் போகலாம். தொலைபேசி மூலம் வரும் தகவலால் திடீர் பயணம் செல்ல வேண்டிய நிலை உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், தள்ளிவைத்த காரியத்தை உயரதிகாரிகளின் விருப்பப்படி உடனடியாக செய்து பாராட்டுப் பெறுவீர்கள். அலுவலகத்தில் குடும்பச் செய்திகளைப் பேசாமல் இருப்பது நல்லது. சொந்தத் தொழில் செய்பவர்கள், பணிச் சுமையால் அல்லல்படுவார்கள். பணியை சிறப்பாக முடிக்க அதிக நேரம் செலவிடுவீர்கள். கூட்டுத் தொழிலில் வியாபாரத்தில் சுமாரான லாபம் இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு கடன்தொல்லைகள் ஏற்படக்கூடும். பெண்கள், சுப காரியங்களில் பங்கேற்று மகிழ்வர். கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்களைப் பெறுவர். பங்குச்சந்தை வியாபாரம் சுமாராக நடைபெறும்.
பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு, வில்வ மாலை சூட்டி, நெய் தீபமிடுங்கள்.