சிம்மம் - வார பலன்கள்
குறைகளின்றி பணிகளைச் செய்யும் சிம்ம ராசி அன்பர்களே!
செய்யும் பணிகளில் ஊக்கத்தோடு செயல்பட்டு, எதிர்பார்க்கும் பலன்களைப் பெறுவீர்கள். சில காரியங்களில் மேலும் முயற்சிகள் தேவைப்படலாம். திட்டமிட்ட பணவரவுகள் சரியான காலத்தில் வந்து சேர்ந்தாலும், எதிர்பாராத செலவுகள் தொல்லை அளிக்கும். முக்கிய நண்பர் ஒருவருக்கு அவசர நேரத்தில் பண உதவி செய்ய நேரிடும். உத்தியோகத்தில், உயர் அதிகாரியின் ஆதரவுடன் சில சலுகைகளைப் பெறுவீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். பழைய வாடிக்கையாளருக்குச் செய்து கொடுத்த வேலையில் உள்ள குறைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கூட்டுத் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகமாகும். மூலப்பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். குடும்பம் சீராக நடைபெற்றாலும் சிறு சிறு பிரச்சினைகளும் தலைகாட்டலாம். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளில் சுறுசுறுப்பாக பணியாற்றுவர்.
பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்யுங்கள்.