சிம்மம் - வார பலன்கள்
கருணை, அன்புடன் பழகும் சிம்ம ராசி அன்பர்களே!
நினைத்த காரியத்தை நடத்தி முடிக்க, நெருங்கிய நண்பர் ஒருவர் கைகொடுப்பார். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரலாம். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். சுப விரயம் அதிகரிக்கும் நேரம் இது. இந்த காலகட்டத்தில் பணத்தை சேமிக்க இயலாது என்பதால், இல்லத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவது, சுப காரியங்களைச் செய்வது என்று செலவிடலாம். திருமணம் ஆகாத பெண்களுக்கு விவாகம் கூடி வரும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கும் திறமை உங்களிடம் உண்டு. பங்குச்சந்தை வியாபாரம் ஓரளவு லாபத்தைப் பெற்றுத் தரும். உங்கள் வாழ்க்கைத் துணைவர் ஒன்றுமில்லாத விஷயத்திற்கு கோபப்பட்டாலும், உங்கள் மவுனம் இல்லத்தில் அமைதியை உண்டாக்கும். நிலம் வாங்கும் எண்ணத்தை தள்ளிப்போடுவது நல்லது.
பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபாடு செய்யுங்கள்.