சிம்மம் - வார பலன்கள்
உதவும் மனப்பான்மை கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!
ஞாயிறு பகல் 12.39 மணி முதல் செவ்வாய் மாலை 4.19 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தடைபட்ட காரியங்களை முயற்சித்தால் முடிக்கலாம். உத்தியோகஸ்தர்கள் சிலரது கோரிக்கைக்கு உயர் அதிகாரியின் ஒப்புதல் கிடைக்கும். சகப் பணியாளர்களுடன் சுமுகமாக நடந்துகொள்வது, பிரச்சினைகளை தவிர்க்க வழிவகுக்கும்.
சொந்தத்தொழிலில் ஆதாயம் சுமாராகவே இருக்கும். பழைய வாடிக்கையாளர்கள் மூலம் நல்ல திருப்பத்தை சந்திப்பீர்கள். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளின் தலையீடு காரணமாக, நிர்வாகத்தில் அசவுகரியம் உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். இல்லத்தில் சுபகாரியம் நடத்த திட்டமிடுவீர்கள். கலைஞர்கள் பணியில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு, கொண்டைக் கடலை மாலை அணிவித்து வழிபடுங்கள்.