சிம்மம் - வார பலன்கள்
நீதி நேர்மையுடன் பழகும் சிம்ம ராசி அன்பர்களே!
நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உறவினர்களும், நண்பர்களும் உதவியாக இருப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்தி, மகிழ்ச்சி தரும். உத்தியோகஸ்தர்கள் அதிகப் பணிகளால் அல்லல்பட நேரலாம். சக ஊழியர்கள் ஆதரவாக நடந்துகொள்வர்.
சொந்தத் தொழிலில், புதிய வாடிக்கையாளர் அறிமுகம் கிடைக்கும். அவசர வேலைகளுக்காக கூடுதல் நேரம் வேலை செய்ய நேரிடும். கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். வியாபார ஸ்தலத்தை விரிவாக்கத் திட்டமிடுவீர்கள். குடும்பத்தில் அமைதியான போக்கு காணப்படும். குலதெய்வ வழிபாடு செய்யச் செல்வது பற்றி குடும்பத்தாருடன் ஆலோசிப்பீர்கள். வேலைக்குப் போகும் பெண்களுக்கு அலுவலகம் மூலம் பணவரவுகள் வந்து சேரும். கலைஞர்களுக்குப் பிரபல நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் மூலம் வருவாய் கிடைக்கும்.
பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை துர்க்கைக்கு சிவப்பு வண்ண மலர் மாலை சூட்டி வணங்குங்கள்.