சிம்மம் - வார பலன்கள்
பிறரை பாராட்டும் மனம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!
நினைத்த காரியங்கள் இனிதே நிறைவேறும். தந்தை வழியில் உதவிகள் கிடைக்கலாம். நிதானமாகச் செயல்பட்டு காரியங்களில் வெற்றி தேடுவீர்கள். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் காணலாம். கனிவான பேச்சுகளால் காரியங்களை சாதிப்பீர்கள். அதேநேரம் ஆரோக்கியத்திற்கு குறிப்பிட்ட அளவு பணத்தை செலவு செய்ய நேரிடலாம். சொத்து விற்பனையில் முன்னேற்றம் உண்டு.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பொறுப்புகளில் அதிக கவனம் தேவைப்படும். சொந்தத் தொழில் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியதிருக்கும். முக்கியமான சமயத்தில் தொழிற்சாலையில் சிறிய தொல்லைகளை சந்திப்பீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள், கூட்டாளிகளின் சொந்த விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் பிரச்சினைகள் தோன்றி மறையும்.
பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு மஞ்சள் மலர் மாலை சூட்டி வழிபடுங்கள்.