துலாம் - வார பலன்கள்
27-10-2023 முதல் 2-11-2023 வரை
எச்சரிக்கையுடன் பழகும் துலாம் ராசி அன்பர்களே!
திங்கள் பகல் 12.45 மணி முதல் புதன் இரவு 7.24 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், எதிலும் நிதானமான போக்கு அவ சியம். உத்தியோகத்தில் சிலர், பதவி உயர்வு பெற்று விரும்பிய இடமாற்றம் பெறுவர். சிலருக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த கடன் தொகை கைக்கு கிடைத்து, பாதியில் நிறுத்தி இருந்த பணியைத் தொடருவர். வேலைக்காரர் ஒருவரின் குடும்ப நிகழ்ச்சிக்கு தகுந்த சன்மானம் அளிப்பீர்கள். சொந்தத் தொழிலில் முக்கியமான திருப்பம் ஏற்படலாம். நவீனக் கருவிகளைக் கொண்டு பணியாற்றும் சிறந்த உதவியாளர் கிடைத்து, தொழில் ரீதியான முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். கூட்டுத்தொழிலில் வியாபாரம் நன்கு நடைபெற்று எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கக் கூடும். குடும்பத்தில் அமைதி நிலவும். கலைஞர்கள், பிரபல நிறுவனத்தின் அழைப்பால் மகிழ்ச்சி அடைவார்கள்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்.