துலாம் - வார பலன்கள்


துலாம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 28 Oct 2022 1:30 AM IST (Updated: 28 Oct 2022 1:31 AM IST)
t-max-icont-min-icon

சித்திரை 3,4-ம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதங்கள்

முன்னேறத் துடிக்கும் நெஞ்சம் கொண்ட துலா ராசி அன்பர்களே!

விலை உயர்ந்த பொருள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. செய்யும் செயல்களில் உறுதியுடன் முன்னேறுவீர்கள். உத்தியோகம் செய்பவர்களில் சிலர், ஓய்வு பெற்று நவீன தொழில் ஒன்றை தொடங்குவது பற்றி சந்திப்பீா்கள். சொந்தத்தொழில் செய்பவர்கள், முதலில் செய்து கொடுத்த வேலையில் உள்ள குறையை நிவர்த்தி செய்ய வேண்டியிருக்கலாம். வேலைப்பளு அதிகரிக்கும், வருமானம் போதுமானதாக இருக்காது. கூட்டுத்தொழில் வியாபாரம் சுமாராக நடைபெறும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்லுங்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் வழக்கமான லாபம் குறையாது. கலைஞர்கள் தீவிர முயற்சியின் மூலம் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். ஆனால் வருமானம் குறைவாகவே இருக்கும். குடும்பத்தில் பழைய பாக்கிகள் தலைதூக்கும். பெண்களுக்கு தாய் வழியில் சொத்துக்கள் வந்து சேர வாய்ப்புண்டு.

பரிகாரம்:- முருகப்பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை நெய் தீபமிட்டு வழிபட்டால் சகல நலன்களும் உண்டாகும்.


Next Story