துலாம் - வார பலன்கள்
முன்யோசனையுடன் செயல்படும் துலா ராசி அன்பர்களே!
புதன்கிழமை காலை 8.55 மணி முதல் வியாழக்கிழமை வரை சந்திராஷ்டமம் உள்ளதால், சச்சரவுகள் தேடி வரக்கூடும். நிறைவு பெறாத செயல்களைச் செய்து முடிக்க, தகுந்த நபர்களின் உதவியை நாடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள், அதிக வேலைப்பளு காரணமாக ஓய்வின்றி உழைக்க வேண்டியதிருக்கும், கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு, வங்கிகளில் எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கலாம். பங்குச்சந்தையில் ஸ்திரமான விலை உள்ள பங்குகளைப் பெற முற்படுங்கள். கலைஞர்கள், பெரிய நிறுவனங்களில் வாய்ப்புகளைப் பெற முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளைக் கூடிப் பேசி சுமுகமாக சரிசெய்து கொள்வீர்கள். பெண்களுக்கு ஆரோக்கிய சீர்கேட்டால் உற்சாகம் குறையலாம்.
பரிகாரம்:- ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை வெற்றிலை மாலை சூட்டி வழிபாடு செய்தால் சகல நலன்களும் உண்டாகும்.