துலாம் - வார பலன்கள்


துலாம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 11 Nov 2022 1:24 AM IST (Updated: 11 Nov 2022 1:25 AM IST)
t-max-icont-min-icon

காரியங்களில் வெற்றி கண்டிடும் துலா ராசி அன்பர்களே!

வெள்ளிக்கிழமை மாலை 6.49 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், எதிலும் மிகுந்த கவனத்துடன் செயல்படுங்கள். பணப் பரிவர்த்தனைகளில் நிதானமாக முடிவெடுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்கள் பொறுப்பை உணர்ந்து கவனமுடன் செயல்பட்டால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்க வாய்ப்பு உண்டு.

சொந்தத் தொழில் செய்பவர்கள், முன்னேற்றத்திற்காக கடினமாக முயற்சிப்பீர்கள். கூட்டுத் தொழிலில் லாபம் காண ஓய்வின்றி உழைப்பீர்கள். போட்டியாளர்களை சமாளிக்க, தொழிலில் புதுமைகளை புகுத்துவீர்கள்.

குடும்ப வாழ்க்கை சிறுசிறு குறைகளோடு நடைபெறும். கலைஞர்கள் பணிகளில் கலகலப்புடன் ஈடுபடுவார்கள். பங்குச்சந்தை வியாபாரம் நன்றாக நடைபெறும்.

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை அன்று வெற்றிலை மாலை அணிவித்து வழிபாடு செய்தால் காரியங்கள் நிறைவேறும்.


Next Story