துலாம் - வார பலன்கள்
உற்சாகத்தை வெளிப்படுத்தும் துலா ராசி அன்பர்களே!
புதிய பண வரவுகள் உங்களுக்கு உண்டாகும். உத்தியோகத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எந்த உத்தியோகத்தில் இருந்தாலும் அவரவருக்குத் தகுந்தபடி நன்மைகள் கிடைப்பதை யாராலும் தடுக்க முடியாது. அது பதவி உயர்வாகவோ அல்லது வருமானம் அதிகரிப்பதாகவோ இருக்கலாம்.
வெளிநாட்டுப் பயணத்திற்கு முயற்சி செய்து வருபவர்களுக்கு, தற்போது அதற்கான வாய்ப்புகள் கைகூடி வரும். பெண்களுக்கு உத்தியோகத்தில் சற்று தொல்லை தோன்றலாம். அதனால் எரிச்சல் படவும், வேலையை விட்டு விலகவும் எண்ணம் தோன்றும். இருந்தாலும் தற்போது நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். பெரிய பிரச்சினைகள் வராது என்பதால் அதிகம் கவலைப்பட நேரிடலாம். பிரச்சினைகள் குறையக் காண்பார்கள்.
பிரிந்து சென்ற நண்பர் ஒருவர் நட்பு பாராட்டி தேடி வரக்கூடும். குடும்பத்தில் இருந்து வந்த பகை விலகும்.
பரிகாரம்:- திங்கட்கிழமை விநாயகப் பெருமானை தீபமேற்றி வழிட்டால் தடைகள் விலகும்.