துலாம் - வார பலன்கள்
பிறருக்கு உதவும் குணம் கொண்ட துலா ராசி அன்பர்களே!
நண்பர்களின் உதவியுடன் முன்னேற்றம் காணும் வாரம் இது. உத்தியோகஸ்தர்கள், பணியில் கவனமாக இல்லாவிட்டால், மேலதிகாரிகளின் கோபப்பார்வைக்கு இலக்காக நேரிடும். வேலைப்பளு அதிகரிப்பதால் ஓய்வின்றி உழைக்க வேண்டியதிருக்கும். சொந்தத் தொழிலில் போதிய வருமானம் இருக்கும். வாடிக்கையாளரின் ரசனைக்கு ஏற்ப வேலைகளை முடித்துக் கொடுத்து பாராட்டுப் பெறுவீர்கள். கூட்டுத்தொழிலில் லாபம் இல்லாவிட்டாலும், வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். பங்குச்சந்தையில் ஆதாயம் கிடைக்காது. கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து, பணிகளில் கறுசுறுப்பாக ஈடுபடுவர். சகக் கலைஞர்களின் ஆதரவு இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், பெரிய பாதிப்பு வராது. உடன்பிறப்பால் சிறு மனக் கலக்கம் உண்டாகும். உறவினர் வருகையால் செலவு உண்டு.
பரிகாரம்:- முருகப்பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை நெய் தீபமிட்டு வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும்.