துலாம் - வார பலன்கள்
அதிக உழைப்பை வெளிப்படுத்தும் துலா ராசி அன்பர்களே!
புதிய யுக்திகளால் பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, இடமாற்றம், பதவி உயர்வு போன்றவை கிடைப்பதில் தடைகள் ஏற்பட்டாலும், இறுதியில் அதற்கான உத்தரவைப் பெற்று மகிழ்வீர்கள்.
தொழிலில் படிப்படியான வளர்ச்சியையும், திருப்திகரமான வருமானத்தையும் பெறுவீர்கள். கூட்டுத் தொழில் வியாபாரம் சுமாராக நடைபெற்றாலும், நஷ்டத்தை உண்டாக்காது. கலைஞர்களுக்கு, சகக்கலைஞர்களால் ஒப்பந்தங்கள் தடைபடலாம்.
அரசியல்வாதிகள் உன்னதமான உயர்நிலையை அடையக்கூடிய அறிகுறிகள் தோன்றும். பெண்கள், குடும்ப உறுப்பினர்கள் அனைவரோடும் சுமுகமாக நடந்து கொண்டு நற்பெயரை வாங்குவார்கள். கணவன் - மனைவி இடையே இணக்கமான சூழல் தோன்றும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது அவசியம்.
பரிகாரம்:- சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டி வழிபட்டால் தொல்லைகள் அகலும்.