துலாம் - வார பலன்கள்


துலாம் - வார பலன்கள்
தினத்தந்தி 29 Dec 2022 8:27 PM GMT (Updated: 29 Dec 2022 8:27 PM GMT)

30.12.2022 முதல் 5.1.2023 வரை

உற்சாகம், உறுதியான உள்ளம் கொண்ட துலா ராசி அன்பர்களே!

தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியாகவே முடியும். இருந்தாலும் செவ்வாய் முதல் வியாழக்கிழமை காலை 9.33 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், சில காரியங்களில் தடை உண்டாகும். தடைகளை உடைத்து முன்னேறுவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். மற்றவர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பொறுப்புகளில் அதிக கவனம் செலுத்துங்கள்.

சொந்தத் தொழில் செய்பவர்கள், வேலைகளை கூடுதல் கவனத்துடன் செய்யாவிட்டால், பிரச்சினை உருவாகும். கூட்டுத்தொழில் முயற்சியில் வியாபாரம் நன்றாக நடைபெறும். வாடிக்கையாளர்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள்.

குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. கலைஞர்கள், சக கலைஞர்களுடன் பழகுவதால் தொழில் வளர்ச்சி ஏற்படும்.

பரிகாரம்:- முருகப்பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை அன்று நெய் தீபம் ஏற்றிவைத்து வணங்கி வாருங்கள்.


Next Story