துலாம் - வார பலன்கள்
நிர்வாகத் திறன் மிகுந்த துலா ராசி அன்பர்களே!
நன்மைகளும், தொல்லைகளும் கலந்த பலன்கள் கிடைக்கும் வாரம் இது. பணத் தட்டுப்பாடு இருந்தாலும், நண்பர்களின் உதவியால் மகிழ்வீர்கள். உடல் நலக்குறைவு, கடன் தொல்லை ஏற்பட வாய்ப்புண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள், உயர் அதிகாரிகளிடம் எந்தவித சலுகையையும் எதிர்பார்க்க முடியாது. சகப் பணியாளர்களின் குடும்ப பிரச்சினையில் தலையிடாதீர்கள்.
தொழில் செய்ய விரும்புபவர்கள், கூட்டாளிகள் இல்லாமல் தனிப்பட்ட முறையில் செய்வது நல்லது. தொழில் வியாபாரம் நல்லபடியாக நடந்தாலும், வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைக்க வேண்டிய தொகை தாமதமாகலாம்.
கலைஞர்களுக்கு, சிறு சிறு வாய்ப்புகள் வந்தபடி இருக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே கருத்துவேறுபாடு தோன்றி மறையும். பெண்கள், அக்கம்பக்கத்தினர் பிரச்சினையில் தலையிட்டால் சிக்கல்கள் உருவாகும்.
பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை, சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் சிரமங்கள் குறையும்.