துலாம் - வார பலன்கள்


துலாம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 31 March 2023 1:49 AM IST (Updated: 31 March 2023 1:51 AM IST)
t-max-icont-min-icon

கம்பீரமான குரலுக்குரிய துலாம் ராசி அன்பர்களே!

செய்யும் காரியங்களில் முயற்சியும், ஈடுபாடும் அதிகரிக்கும். பல செயல்களில் முன்னேற்றமான பலன்கள் ஏற்படும். வரவுகள் சிரமமின்றி வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு, செல்வாக்குள்ள புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளா்களால் பணிகள் கிடைக்கும். அதை விரைந்து முடிக்க ஓய்வின்றி பணியாற்றுவீர்கள். கூட்டுத்தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகமாகும். பணியாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். நிலுவையில் உள்ள பணத்தை வசூலிக்க முற்படுவீர்கள். குடும்பத்தில் அமைதியான போக்கு காணப்பட்டாலும், சிறு சிறுபிரச்சினைகளும் இருக்கும். அடுப்பில் பணியாற்றும் போது, பெண்கள் கவனமாக இருப்பது நல்லது. கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெறுவர். அதன் மூலம் பொருளாதார உயர்வையும் அடைவார்கள்.

பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை, மகாலட்சுமி தேவிக்கு செந்தாமரை மலர் சூட்டி, நெய் தீபமிடுங்கள்.


Next Story