துலாம் - வார பலன்கள்
அதிக முயற்சியுடன் செயலாற்றும் துலாம் ராசி அன்பர்களே!
உங்களது சிந்தனைகள் தெளிவாக இருந்தாலும், எடுத்த காரியங்கள் நினைத்த நேரத்திற்குள் முடியாமல் இழுத்தடிக்கலாம். வெளியூர்களில் இருந்து வரும் தகவல் வருத்தம் தரலாம். உத்தியோகஸ்தர்கள், விடுமுறையில் உள்ளவர்களின் வேலையையும் சேர்த்து செய்ய நேரலாம். சிலருக்கு அலுவலகத்திலேயே செல்வாக்குள்ள பொறுப்புகள் வந்துசேரும்.
சொந்தத் தொழில் செய்பவர்கள் புதிய நபர்களின் வருகையால் அதிக வேலையும், வருமானமும் பெறக்கூடும். கூட்டுத் தொழில் நன்றாக நடைபெறும். எதிர்பார்க்கும் லாபம் குறையாது. போட்டியாளர்களின் கரங்கள் வலுத்து இருப்பதால், அவைகளை முறியடிக்க பங்குதாரர்களுடன் ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழல் இருந்தாலும், தொல்லைகளும் ஏற்படத்தான் செய்யும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகள் பெற சகக் கலைஞர்கள் மூலம் முயற்சிப்பார்கள்.
பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு செந்தாமரை மலர் மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள்.