துலாம் - வார பலன்கள்


துலாம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 19 May 2023 1:25 AM IST (Updated: 19 May 2023 1:26 AM IST)
t-max-icont-min-icon

அறிவார்ந்து செயலாற்றும்துலா ராசி அன்பர்களே!

வெள்ளி பகல் 2.02 மணி முதல் ஞாயிறு வரை சந்திராஷ்டமம் உள்ளதால், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை தவிர்க்கவும். தேவையற்ற தொல்லைகள் தேடி வந்தாலும், நண்பர்களும், உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்க்கும் தொகை வந்துசேரும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். சொந்தத் தொழிலில் எதிர்பார்க்கும் முன்னேற்றம் காணப்படும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் வருவாய் அதிகரிப்பும் உண்டு. கூட்டுத்தொழில் வியாபாரத்தில், எதிர்பார்க்கும் லாபம் ஏற்படும். விலைவாசி ஏற்றத்தால் வியாபாரத்தில் கடினப் போக்கு காணப்படும். குடும்பம் சிறு சிறு பிரச்சினைகளை சந்தித்தாலும், அமைதியான சூழலே நிலவும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் பங்கேற்பர். பங்குச்சந்தையில் முன்னேற்றம் காணப்படும்.

பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை பெருமாளுக்கு துளசி மாலை சூட்டி, நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.


Next Story