மீனம் - தமிழ் மாத ஜோதிடம்


மீனம் -  தமிழ் மாத ஜோதிடம்
x
தினத்தந்தி 21 April 2022 3:57 PM IST (Updated: 21 April 2022 3:59 PM IST)
t-max-icont-min-icon

சித்திரை மாத ராசி பலன்கள் 14-04-2022 முதல் 14-05-2022 வரை

எந்த நேரமும் எதிர்காலத்தைப் பற்றியே சிந்திக்கும் மீன ராசி நேயர்களே!

சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் வியாழன் ராசியிலேயே பலம் பெற்று சஞ்சரிக்கிறார். தன ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு இருப்பதால் செல்வ நிலை உயரும். அஷ்டமத்தில் கேது சஞ்சரிப்பதால் அலைச்சல் கூடும்.

மீன - சுக்ரன் சஞ்சாரம்

சித்திரை 15-ந் தேதி, மீன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்கு, மாதப்பிறப்புக்கு முன்பாகவே பெயர்ச்சியாகும் குருவோடு இணைகிறார். மீன ராசி, சுக்ரனுக்கு உச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், உச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. அதிலும் உங்கள் ராசியில் உள்ள குருவோடு அவர் இணைவதால் நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கும். ஆரோக்கியத் தொல்லை தலைதூக்கும். இடமாற்றம், ஊர் மாற்றம், வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் பற்றி சிந்திக்க உகந்த நேரம் இது.

ரிஷப - புதன் சஞ்சாரம்

சித்திரை 15-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. தாய்வழி ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணைக்கு வேலை அமையும். வெளிநாட்டு அழைப்பு வந்தாலும், சனி பார்வை இருப்பதால் அதை ஏற்க வேண்டாம். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும். உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைப்பதால் பிரச்சினை உருவாகலாம். தன்னம்பிக்கை குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

புதன் வக்ர இயக்கம்

சித்திரை 17-ந் தேதி, ரிஷப ராசியில் புதன் வக்ரம் பெறுகிறார். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம்பெறுவது யோகம்தான். எனவே குடும்பத்தில் நிலவிய சொல் யுத்தங்கள் சுமுகமாக முடியும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எதிரிகளைப் புரிந்து கொண்டு செயல்பட்டால் வெற்றி உறுதி. வீட்டைச் சீரமைக்கும் பணி தொடரும். பணிபுரியும் இடத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கலாம்.

மேஷ - புதன் சஞ்சாரம்

சித்திரை 21-ந் தேதி, மேஷ ராசிக்கு புதன் வக்ர இயக்கத்தில் பின்னோக்கிச் செல்கிறார். அங்கு, உச்சம் பெற்ற சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். எனவே கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். அதே நேரத்தில் குரு உங்கள் ராசியிலேயே பலம் பெற்றுள்ளார். எனவே புதிய முயற்சிகள் வெற்றியாகும். படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும். பொதுவாழ்வில் இருப்பவருக்கு பொறுப்புகள் மாற்றப்படலாம். விரயங்கள் அதிகரிக்கும் நேரம் இது.

இம்மாதம் பைரவர் வழிபாடு வளர்ச்சியைக் கூட்டும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஏப்ரல்: 19, 20, 21, 24, 25, 30, மே: 1, 4, 5மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் ஆரோக்கியம் சீராகி, மகிழ்ச்சிப்படுத்தும். பொருளாதார நிலை திருப்தி தரும். கணவன் - மனைவி ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் எண்ணங்களை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டுவீர்கள். மங்கல ஓசை மனையில் கேட்கும். பணிநிரந்தரம் பற்றிய தகவல் உண்டு. அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கிடைக்கும். ஜென்ம குருவிற்கு பரிகாரமாக வியாழன்தோறும் விரதம் இருந்து தென்முகக் கடவுளை வழிபடுங்கள்.


Next Story