மீனம் - வார பலன்கள்


மீனம் - வார பலன்கள்
தினத்தந்தி 7 July 2023 12:48 AM IST (Updated: 7 July 2023 12:49 AM IST)
t-max-icont-min-icon

07-07-2023 முதல் 13-7-2023 வரை

தோல்விகளை வெற்றியாக மாற்றும் மீன ராசி அன்பர்களே!

நண்பர்களின் ஒத்துழைப்பு இருந்தாலும் கூட, சில காரியங்களில் பின்னடைவு இருக்கக்கூடும். அவசியமான வேலைகளை கவனமாகச் செய்வது நல்லது. பண வரவுகள் சிறிது தாமதமாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உயரதிகாரிகளின் விருப்பப்படி முக்கிய நபரின் வேலையை உடனே செய்து கொடுக்க நேரிடும். பணிகளில் கவனமாக இல்லாவிட்டால் உயர் அதிகாரியின் கோபப் பார்வைக்கு இலக்காவீர்கள்.

சொந்தத் தொழில் சுறுசுறுப்பாக நடைபெறும். பழைய வாடிக்கையாளர் மூலம் புதிய நபர் அறிமுகம் இருக்கும். கூட்டுத்தொழில் முயற்சியில் எதிர்பார்க்கும் லாபம் வந்து சேரும். குடும்பத்தில் சீரான போக்கு காணப்படும். சிறுசிறு பிரச்சினைகளை அதிக பாதிப்பு இன்றி சமாளித்து விடுவீர்கள். பெண்களின் சேமிப்பு செலவழியும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் பங்கேற்க வெளியூர் பயணம் மேற்கொள்வர்.

பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை துர்க்கைக்கு செவ்வரளி மலர் மாலை சூட்டி, நெய் தீபம் ஏற்றுங்கள்.


Next Story