மீனம் - வார பலன்கள்
உயர்வான எண்ணம் கொண்ட மீன ராசி அன்பர்களே!
எடுக்கும் முயற்சிகள் பலவற்றில் வெற்றியைக் காண்பீர்கள். எதிர்பார்க்கும் பணவரவுகள் குறிப்பிட்டபடி வந்துசேரும். கடன்களை அடைக்க வாய்ப்பு உண்டாகும். கவனமுடன் இருப்பது அவசியம். உத்தியோகஸ்தர்களின் பணிகளில் மாற்றம் ஏற்படலாம். வேலைகள் முன்பு இருந்ததை விட அதிகரிக்கலாம். அவசியமான பணி ஒன்றினை உயரதிகாரிகளின் விருப்பத்திற்கு இணங்க விரைவாக செய்து முடிக்க நேரலாம். சொந்தத் தொழிலில், பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும். வாடிக்கையாளர் களின் எண்ணப்படி செய்து கொடுத்த பணி ஒன்றுக்காகப் பாராட்டு பெறுவீர்கள். கூட்டுத்தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். சிறுசிறு கடன் தொல்லைகள் இருந்தாலும், அவற்றை சமாளித்து விடுவீர்கள். கலைஞர்கள் பணிகளில் சுறுசுறுப்பு காட்டுவர்.
பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்து வழிபட்டு வாருங்கள்.