மீனம் - வார பலன்கள்


மீனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 21 July 2023 1:34 AM IST (Updated: 21 July 2023 1:35 AM IST)
t-max-icont-min-icon

நீதி நேர்மையுடன் நடக்கும் மீன ராசி அன்பர்களே!

செவ்வாய் காலை 8.27 மணி முதல் வியாழன் மாலை 3.48 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், அதிக வரவுகள் இருந்தாலும், செலவுகளும் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பொறுப்புகளைக் கவனமாகச் செய்து மேலதிகாரிகளைத் திருப்திப்படுத்த முயற்சிப்பீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள், நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். சிலர் வண்டி, வாகனம் முதலியவற்றில் முதலீடு செய்வர்.

கூட்டுத்தொழில் சிறப்பாக நடைபெறும். மூலதனத்தை அதிகரித்து வியாபாரத்தை அதிகப்படுத்துவீர்கள். புதிய கூட்டாளியைச் சேர்க்க முயலுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். பழைய கடன்கள் தொல்லையளித்தாலும் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். கலைஞர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளால் வருமானமும், புகழும் அதிகரிக்கும்.

பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு வில்வ இலை மாலை அணிவித்து வணங்கி வாருங்கள்.


Next Story