மீனம் - வார பலன்கள்


மீனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 28 July 2023 1:15 AM IST (Updated: 28 July 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

முன்னெச்சரிக்கையோடு செயல்படும் மீன ராசி அன்பர்களே!

சுணக்கமாக நடந்த வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற முயற்சி மேற்கொள்வீர்கள். தொழில் ரீதியான தன வரவுகள் இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். பிரிந்திருந்த மனைவி- பிள்ளைகளுடன் இணைந்து வாழும் சூழல் உருவாகும். பணப் பொறுப்பில் இருப்பவர்கள் கவனமாக இருங்கள். சொந்தத் தொழிலில், வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த முயற்சிப்பீர்கள். புதிய கிளை தொடங்கும் எண்ணத்தை தள்ளிப்போடுங்கள். கூட்டுத் தொழில் வியாபாரம் முன்னேற்றமாக நடைபெறும். கூட்டாளிகள் ஒத்துழைப்போடு அதிக மூலதனம் போடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். புதிய பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். நண்பர்களும், உறவினர்களும் உதவுவர். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளில் கவனம் செலுத்துவர். பங்குச்சந்தையில் எதிர்பார்த்த லாபம் வரும்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு கருநீல மலர் மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள்.


Next Story