மீனம் - வார பலன்கள்


மீனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 4 Aug 2023 12:59 AM IST (Updated: 4 Aug 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

4.8.2023 முதல் 10.8.2023 வரை

கம்பீர தோற்றமும் நேர்மையும் கொண்ட மீன ராசி அன்பர்களே!

இந்த வாரம் நீங்கள் முயற்சியோடு ஈடுபட்ட சில செயல்களில் முன்னேற்றமான போக்கை காண்பீர்கள். இருந்தாலும் உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் பொறுப்புகளில் கவனமாக இல்லாவிட்டால், உயரதிகாரிகளின் கோபப்பார்வைக்கு இலக்காக நேரிடும்.

சொந்தத் தொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர்களின் ரசனைகளைப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. கூட்டுத் தொழில் வியாபாரத்தில் வழக்கமான லாபம் காணப்படும். பணியாளர்களை அடிக்கடி கண்காணித்து அவர்களுக்குள் இருந்த மனவேறுபாடுகளை அகற்றுவீர்கள். குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளை அவ்வப்போது சரி செய்து விடுவீர்கள். பெண்கள் தாய் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்புவர். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெற்று பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவர். பங்குச்சந்தை லாபம் ஈட்டும்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு சிவப்பு மலர் மாலை அணிவித்து வழிபடுங்கள்.

1 More update

Next Story