மீனம் - வார பலன்கள்


மீனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 18 Aug 2023 1:11 AM IST (Updated: 18 Aug 2023 1:12 AM IST)
t-max-icont-min-icon

தைரியமான மனம் படைத்த மீன ராசி அன்பர்களே!

திங்கட்கிழமை மாலை 3.56 மணி முதல் புதன்கிழமை வரை சந்திராஷ்டமம் உள்ளதால், பணப் பரிவர்த்தனையில் கவனம் அவசியம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்து செயல்படுங்கள். பழைய பகை மறையும். நீதிமன்ற வழக்கு சாதகமாக மாறக்கூடும். உத்தியோகத்தில் சிலருக்கு பொறுப்புள்ள பதவிகள் வந்துசேரும்.

சொந்தத் தொழில் சிறப்படையும் வண்ணம் வாடிக்கையாளர்கள் பெருகுவர். கூட்டுத் தொழில் வியாபாரம் லாபம் ஈட்டித்தரும். தொழிலை விரிவுபடுத்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் சீரானப் போக்கு காணப்படும். பெண்களுக்கு, பிள்ளைகளின் வாயிலாக அக்கம் பக்கத்தினருடன் மனத்தாங்கல் உருவாகும். கலைஞர்கள் பிரபல நிறுவனங்களின் வாய்ப்புகளைப் பெற தீவிரமாக முயற்சிப்பர், பங்குச்சந்தை சுறுசுறுப்பாக நடைபெறும்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.


Next Story