மீனம் - வார பலன்கள்
13-10-2023 முதல் 19-10-2023 வரை
நுண்ணறிவால் உயர்ந்து நிற்கும் மீன ராசி அன்பர்களே!
ஞாயிறு காலை 6.36 மணி முதல் செவ்வாய் பகல் 2.44 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், சில செயல்களில் எதிர்பாராத தளர்வுகள் உண்டாகக்கூடும். மிக முக்கியமான காரியங்களை அதிகக் கவனத்துடன் செய்வது நல்லது. பண விவகாரங்களில் ஒரு முறைக்கு இருமுறை நிதானமாக யோசித்து செய்வது நன்மை தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு அலுவலகத்தில் கிடைக்க வேண்டிய கடன் தொகைகள் கைக்குக் கிடைத்து, நிறுத்தி இருந்த வேலையைத் தொடருவார்கள். சொந்தத் தொழிலில் வேலைப்பளு அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகமும், அவர்களால் தொழிலில் முன்னேற்றமும் ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காணப்படும். குடும்பத்தில் கடன் தொல்லை அகலும். கலைஞர்கள், தீவிர முயற்சியுடன் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பங்குச் சந்தை நன்றாக நடைபெறும்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை லட்சுமி நரசிம்மருக்கு துளசி மாலை சூட்டி வணங்குங்கள்.