மீனம் - வார பலன்கள்


மீனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 26 Oct 2023 8:07 PM GMT (Updated: 26 Oct 2023 8:07 PM GMT)

27-10-2023 முதல் 2-11-2023 வரை

எதையும் வெற்றியுடன் முடிக்கும் மீன ராசி அன்பர்களே!

நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுவதோடு, எதிர்கால நல்வாழ்வுக்கும் பயனுள்ளதாக அமையும். நண்பர்கள், உறவினர்களிடம் இனிமையாக பேசுவது நன்மைகளை அளிக்கும். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு சம்பள உயர்வுடன் இடமாற்றம் ஏற்படும். சகப் பணியாளர்கள், உங்கள் பணிகளில் ஒத்துழைப்புத் தருவர். நீங்கள் செய்த பணி ஒன்று உயர் அதிகாரிகளால் பாராட்டப் பெறலாம். சொந்தத் தொழில் செய்பவர்கள் நல்ல ஆதாயம் பெறுவதோடு பணிகளில் சுறுசுறுப்பாகவும் காணப்படுவர். வாடிக்கையாளர்கள் உங்கள் திறமையைப் பாராட்டுவதோடு, புதிய நபர்களையும் அறிமுகப்படுத்துவர். கூட்டுத் தொழில் நன்றாக நடைபெற்று நல்ல லாபத்தைப் பெற்றுத்தரும். குடும்பத்தில் அமைதி நிலவும். பங்குச்சந்தை வியாபாரத்தில் லாபம் பெருகும். புதிய நண்பர்கள் முதலீட்டை அதிகரிப்பர்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுங்கள்.


Next Story