மீனம் - வார பலன்கள்
இந்த வாரம் முன் எச்சரிக்கையுடனும், நிதானத்துடனும் பணிகளில் ஈடுபடுவது நல்லது. செலவும், அலைச்சலும் ஏற்படலாம். குலதெய்வ வழிபாடு செய்ய குடும்பத்தோடு வெளியூர் செல்ல திட்டமிடலாம். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனமாக இல்லாவிட்டால் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். சொந்தத்தொழில் செய்பவர்கள் கவனத்துடன் செயல்படுவது அவசியம். கூட்டுத்தொழிலில் பணியாளர்கள் மீது கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் நிலை வரும். கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணி செய்யும் போது கவனமாக இருப்பது அவசியம். அனைவரிடமும் சுமுகமாக நடந்து கொள்வது அவசியம். பங்குச்சந்தை வியாபாரம் ஏற்ற இறக்கங்களால் லாபம் பாதிக்கக்கூடும். இந்த வாரம் செவ்வாய் அல்லது வெள்ளிகிழமை துர்க்கையை வழிபாடு செய்வது நன்மை அளிக்கும்.
Next Story