மீனம் - வார பலன்கள்
பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
ஒவ்வொரு செயலையும் ஆராய்ந்து செய்யும் மீன ராசி அன்பர்களே!
செவ்வாய், முதல் வியாழக்கிழமை காலை 8.41 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் கவனமாக இல்லாவிட்டால், பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். சொந்தத் தொழில் செய்பவர்கள் பணிகளில் உற்சாகமாக இருந்தாலும், வேலையை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்க இயலாது. புதிய வாடிக்கையாளர் வருகையால் பொருளாதாரம் உயரும். கூட்டுத்தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் குறையாது. பங்குச்சந்தை வியாபாரம் சுமாராக நடைபெறும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற்று பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவார்கள். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. அவசியமான செலவுகளுக்கு நண்பர்களிடம் கடன் வாங்கும் நிலை ஏற்படலாம். எந்த ஒரு காரியத்தையும் பல முறை யோசித்துச் செய்யுங்கள்.
பரிகாரம்: முருகப்பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை அன்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நிம்மதியான வாழ்வு அமையும்.