மீனம் - வார பலன்கள்


மீனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 28 Oct 2022 1:37 AM IST (Updated: 28 Oct 2022 1:40 AM IST)
t-max-icont-min-icon

பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

உழைப்பிற்கு அஞ்சாத மனம் கொண்ட மீன ராசி அன்பர்களே!

புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். பதிவேடுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது அவசியம். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். சொந்தத்தொழிலில் வேலைகள் அதிகம் இருந்தாலும், போதிய வருமானம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். கூட்டுத்தொழிலில் வழக்கமான வியாபாரம் நடைபெறும். போட்டிகளைச் சமாளிக்க கூட்டாளிகளுடன் ஆலோசிப்பீர்கள். பங்குச்சந்தை வியாபாரம் சுமாராக நடைபெறும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள். சகக்கலைஞர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே ஒற்றுமை அதிகமாகும். சுப நிகழ்ச்சிகள் நடைபெற முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பெண் களுக்கு விலகிப் போன சொந்தங்கள் தேடி வரக்கூடும்.

பரிகாரம்:- ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை வெற்றிலை மாலை சூட்டி வழிபட்டால் சகல நலன்களும் பெறுவார்கள்.

1 More update

Next Story