மீனம் - வார பலன்கள்


மீனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 3 Nov 2022 7:57 PM GMT (Updated: 3 Nov 2022 7:58 PM GMT)

எடுத்த காரியங்களை முயற்சியால் வெற்றியாக்கும் மீன ராசி அன்பர்களே!

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகமாகலாம். சக நண்பர்களின் வேலைகளையும் சேர்த்து செய்யும் நிலை ஏற்படலாம். சொந்தத் தொழில் செய்பவர்கள் பரபரப்பாக வேலைகளில் ஈடுபட்டாலும் வருமானம் எதிர்பார்க்கும் அளவு இருக்காது. கூட்டுத்தொழில் சுமாராக நடைபெறும். ஆயினும் வழக்கமான லாபம் குறையாது. பங்குச்சந்தை வியாபாரத்தில் லாபம் இல்லாமல் போகலாம். உரியவர்களிடம் ஆலோசனைக் கேட்டு செயல்பட்டால் பலன் கிடைக்கக்கூடும். கலைஞர்கள் புதிய வாய்ப்பைப் பெற தீவிர முயற்சிகளில் ஈடுபட வேண்டியிருக்கலாம். சகக்கலைஞர்களின் குழந்தைகளுக்குக் கல்விக்காகப் பண உதவி செய்வீர்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும், பெரிய பாதிப்புகள் ஏற்படாது. புதிய இடத்தில் அதிக வருமானத்துடன் வேலை கிடைக்கலாம்.

பரிகாரம்:- விநாயகருக்கு செவ்வாய்க்கிழமை அருகம்புல் மாலை சூட்டி வழிபடுவது நல்ல பலன் அளிக்கும்.


Next Story